Yazhpanam FM

Ratings
[Total: 2 Average: 4.5]
Siteyazhpanam.com


கனடாவில் தமிழ் அமைப்புக்கைளை கிழித்து தொங்கவிட்ட கூட்டமைப்பு:பா.உ
===========================================
கனடாவில் இருக்கும் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பின் அழைப்பின் பேரில் கனடா வந்தபின் இனிமேல் நான் எந்த நாட்டிற்கும் உதவி கேட்டு போகக்கூடாது என்று யோசித்தேன் ஏனெனில் கனடாவில் கிடைத்த அனுபவம்.
நேற்று மாலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்வு சங்கமம் மண்டபத்தில் (Sankkamam Party Hall Scarborough ont ,Oct 30, 2018) நடைபெற்றது. முகநூல் வாயிலாகவும், வானொலிகள் வாயிலாகவும் இந்த சந்திப்பு கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் சந்திப்புக்கு மிகவும் குறைந்த மக்களே வந்திருந்தார்கள். முன்னணி அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் அமைப்புக்கள் எதுவும் இந்த நிகழ்வை நடத்தவில்லை, ஆனால் முன்னனி அமைப்புகளின் முகத்திரை இங்கு கிழித்து தொங்கவிடப்பட்டது வந்தவர்களிடம் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

2016 இல் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பினரால் கிழக்கில் மாட்டு பண்ணை அமைக்கவென நடந்த நிதிசேர் நடையில் சேகரிக்கப்பட்ட பணத்தில் (1.1 கோடி ரூபாக்கள் | $85,000.00) இதுவரை, 2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், எந்தவிதமான பணமும் அங்கு சென்று சேரவில்லை. மக்களின் அவசர வாழ்வாதார உதவிகள் என்று எமது மக்களிடம் சேர்த்த பணம் 2 வருடங்களாக இங்குள்ள அமைப்பே (CTC) வைத்திருக்கின்ற விடயம், போட்டுடைத்தார் கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள்.
கனடிய தமிழ் காங்கிரஸ் 2016 இல் மக்களின் அவசர வாழ்வாதாரத்துக்கென நிதிசேர் நடையில் சேர்த்த பணம் இதுவரை அந்த மக்களை எந்த வகையிலும் சென்று சேரவில்லை.

அனுப்பி வைக்கப்படாமைக்கு ஆயிரம் காரணங்களை, கதைகளை சொல்லலாம். ஆனால் மக்களின் அவசர வாழ்வாதார பிரச்சனைகளை காரணமாக சொல்லி சேர்த்த பணம் கடந்த இரண்டு வருடங்களாக அனுப்பிவைக்கப்படாமை ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என பலரும் விசனமடைந்தனர்.
2016 பின்பும் வேறு காரணங்களை சொல்லி மேலும் பல நிதிசேர் நிகழ்வுகளை இந்த CTC அமைப்பு நடத்தியுள்ளது. தாயக நோக்கிய உதவிநலத்திட்ட செயல்பாடுகளில் CTC அமைப்பின் இவ்வாறான தாமதப் போக்குகள் மக்கள் மத்தியில் அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை மேலும் குறைவடையச்ச்செய்யும் என்பது பலரதும் கருத்தாக அமைகிறது. தற்போது வியாழேந்திரன் கனடாவில் ஊடக சந்திப்புகளை நடாத்திவருகிறார். மட்டக்கள்ப்பில் வாழ்வாதார உதவிகள் பல கிராமங்களில் செய்யப்படவேண்டிய அவசியத்தையும் விளக்கிவருகிறார்.
... மேலும்மேலும்

1 month ago

Yazhpanam - யாழ்ப்பாணம்
Video image

'முன்னேறிப் பாய்தல்' =================== இற்றைக்கு சரியாக இருபத்துமூன்று வருடம்....! 1995 இதே நாள்...! கந்தசஷ்டி விரதத்தின் கடைசிநாள்... "அன்பார்ந்த தமிழீழ மக்களே! யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி மிகப்பெரும் இனப்படுகொலையை மேற்கொள்ளும் நோக்குடன் ஸ்ரீலங்கா இராணுவம் நம் மண்ணை முற்றுகையிட்டுள்ளது. ஆகவே உடனடியாக கையில் கிடைப்பவற்றை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான தென்மராட்சி மற்றும் வன்னிப்பிரதேசங்களுக்கு உடனடியாக இடம்பெயர்ந்து செல்லுமாறு வேண்டப்படுகிறீர்கள்!" மக்களின் இதயங்களில் பாரிய அடியாக விழுந்தது இந்த அறிவிப்பு. இராணுவத்தின் ஷெல்வீச்சுகளுக்கு அஞ்சி அவ்வப்போது போவதும் பின்னர் வீடு வருவதுமாக சின்னச்சின்ன இடப்பெயர்வுகளை மக்கள் அனுபவத்தில் கொண்டிருந்தாலும் ஒரேயடியாக எழும்பிப்போ என்றது அந்த அறிவிப்பு. கணப்பொழுதில் எல்லா மனிதரும் கலவரமடைந்து அவசர அவசரமாக கையில் அகப்பட்டதை மட்டும் மூட்டை முடிச்சுக் கட்டினர். அடங்காத ஆழிவாய்ச் சத்தம்போல் ஒரு பொதுவான ஓசை அனைத்துவீடுகளிலிருந்தும் ஒன்றாகி ஓலமிட்டது. "எங்க அம்மா போறம்? நாங்கள் ஏன் போகோணும்? இயக்கம் ஆமியை மறிக்கமாட்டார்களே?" ஏழு வயதுச் சிறுவனாய் அப்போது நான் அம்மாவைக் கேட்டு, அம்மா எதற்குமே பதில்சொல்லாமல் "அண்ணன்ர சையிக்கிள்ள போய் ஏறு" என்று மட்டும் கூறிய அந்தப் பொழுது இன்றும் நெஞ்சிலே பச்சை குத்தியதாக தேங்கிக் கிடக்கின்றது. முன்னேறிப் பாய்ச்சல் 1994இல் முதலாவது பெண் சனாதிபதியாக தெரிவாகிய சந்திரிகா இன்று நாம் நம்பிக்கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேனபோல் தமிழ்மக்களுக்கு சிறு நம்பிக்கையினைக் கொடுக்குமுகமாக புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றார். ஆனால் 1995 இன் நடுப்பகுதிக்கு முன்னதாக விடுதலைப்புலிகள் சந்திராகாவின் ஏமாற்று வித்தைகளை உணர்ந்து இதிலிருந்து வெளியேறி தாக்குதலுக்கு ஆயத்தமானார்கள். அன்றிலிருந்து வடபகுதியை ஏழரைச் சனி ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. முன்பிருந்த UNP அரசைவிட சந்திரிகா அரசு போரிலும் இன அழிப்பு நடவடிக்கையிலும் முழுமூச்சுடன் செயற்படத்தொடங்கியது. அப்போது யாழ் மாநகரம் புலிகளின் வசம் இருந்தது. அதனைக் கைப்பற்றுவதற்கு இராணுவம் படாதபாடு பட்டது. பலமுனைத் தாக்குதல்களினைத் தொடுத்தும் அவை புலிகளால் முறியடிக்கப்பட்டவண்ணம் இருந்தன. குறிப்பாக 'முன்னேறிப் பாய்தல்' என்ற பெயர் குறித்த தாக்குதலோடு இராணுவம் பாரிய முன்னகர்வை மேற்கொண்டது. இதுவும் மக்களுக்கு சிறிய இடப்பெயர்வைக் கொடுத்தாலும் 'புலிப்பாய்ச்சல்' என்ற பெயர்குறித்த புலிகளின் முறியடிப்புச் சமர் மூலம் படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேறினர். இக்காலப் பகுதியில்தான் நவாலி சென்.பேதுருவானவர் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தி 65 பொதுமக்களை நரபலியெடுத்தும் 200க்கும் மேற்பட்டவர்களை படுகாயமடைய வைத்து அங்கவீனர்களாக்கிய இலங்கை விமானப்படையின் புட்காரா ரக விமானங்கள் அதே இடத்தில் புலிகளால் ஏவுகணைத் தாக்குதல்மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது. சூரியகதிர் (ரிவிரெஷ) யாழ்ப்பாணத்தில் படையினர் சந்தித்த இந்த பின்னடைவுகள் கொழும்புக்கு அரசியல் ரீதியில் பாரிய நெருக்கடியைக் கொடுத்தது. நிலமை பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு முப்படைகளையும் அணிதிரட்டிய பாரிய படை நடவடிக்கை ஒன்று திட்டமிடப்பட்டது. அதுதான் ரிவிரெச என்று சிங்களத்தில் அழைக்கப்பட்ட 'சூரியகதிர் இராணுவ நடவடிக்கை'. சூரியகதிர் இம் மாதத்தின் 17ஆம் நாள் பெரும் எடுப்புடன் பலாலி, அளவெட்டி, பொன்னாலை, புத்தூர் போன்ற இடங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட்டாலும் ஆரம்பத்தில் புலிகள் மிகப்பலத்த எதிர்ச் சமருடன் நிலைகளைத் தக்கவைத்திருந்தார்கள். முப்படையினரின் மக்கள் குடியிருப்புக்கள்மீதான கண்மூடித்தனமான தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்ததாலேயே மக்களை முற்றாக இடம்பெயருமாறு புலிகள் இன்றைய தினம் கோரினர். அதன் வெளிப்பாடே இன்றைய பாரிய இடப்பெயர்வு நாள். இந்த அறிவிப்பு இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டு மக்கள் வெளியேறியிருந்தாலும் ஒரு மாதத்திற்கும் மேலாக படையினரால் புலிகளிடமிருந்த யாழ் நகரைக் கைப்பற்றாதுபோய் டிசம்பர் மாதமளவில், போராட்ட வரலாற்றில் கடைசியாக படையினரிடம் யாழ்நகரை புலிகள் பறிகொடுத்தனர். யாழ்ப்பாணத்தின் 70%க்கும் குறையாத சனத்தொகை பெரும்பாலும் யாழ்நகருடன் சேர்த்து வலிகாமம் பகுதியிலேயே அதிகமாக இருந்தது. அத்தனை மக்களும் இரவோடிரவாக அன்றைய அகலமற்ற A9 வீதிவழியாக நத்தை வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தனர். வழிநெடுகிலும் வயதானவர்களின் சாவும் குழந்தைகளின் சாவும் இடுகாடுகளை தோற்றுவித்தவண்ணமே சென்றன. மாரிகால மழை வெள்ளத்தில் இருட்டிலே அமிழ்ந்துபோன அன்றைய பச்சைக் குழந்தைகளோடு குழந்தையாயிருந்து சாவின் எல்லைவரை சென்று மீண்ட இன்றைய 20 வயதுடைய இளைஞர்களும் யுவதிகளும் அந்த அவலத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை! உணவில்லை, தண்ணீரில்லை, வானத்தின்மீது நம்பிக்கை வைத்து அண்ணாந்து வாய்பிழந்து மழைத்தண்ணியைப் பருகிய ஞாபகங்கள் இன்னும் அழியவில்லை! வானம் மட்டும் எங்களுக்காக அழுதுகொண்டிருக்க உலகமோ இருட்டறைக்குள் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தது. தூங்கி எழுந்த பின்னர்கூட நடந்தவை யாவும் உறக்கத்தில் கண்ட கனவென்று எமக்கு கற்பிதம் கூறுகின்றது இப்போது! https://www.youtube.com/watch?v=bpIewu12syI நன்றி: ஐபிசி தமிழ் ... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Yazhpanam FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .